முகப்பு / ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி

ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சென்னை குரோம்பேட்டையில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 142 ஜி.எஸ்.டி ரோடு வெற்றி தியேட்டர் எதிரில், குரோம்பேட்டை சென்னை 44 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

தமிழகத்திலேயே தமிழ் வழியில் ஐஏஎஸ் பயிற்சி அளித்து வரும் ஒரே நிறுவனம்,  ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளிவந்த  ஜீ கே நியூஸ் மாத இதழ் தமிழகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோருக்கு வழிகாட்டி வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளது. ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் நேரடி பயிற்சி மூலம் இதுவரை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இ.டி தேர்வு வெற்றிகள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி அளித்தது. 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆட்சித்தமிழ் அகாடமியில் படித்த ஆசிரியர்கள் 478 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வெற்றிகள். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2013 2016 ஆண்டுகளில் குரூப் 1  குரூப் 2 குரூப் 4 விஏஓ போன்ற தேர்வுகளுக்கு இந்த ஆண்டும் பயிற்சி வகுப்புகளை நடத்தியது.  ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்களில் குரூப் 1 குரூப் 2, குரூப் 4 விஏஓ தேர்வு களில் மொத்தம் 284 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜெயா தொலைக்காட்சி பாராட்டு

ஆட்சித்தமிழ் அகாடமியில் படித்து வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வெற்றி குறித்து அகாடமியில் இயக்குனர் ச. வீரபாபுவிடம் ஜெயா தொலைகாட்சி பேட்டி எடுத்தது. அப்போது ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆட்சித்தமிழ் அகாடமியின் பயிற்சித் திட்டத்தைத் பாராட்டியதோடு தமிழகத்திலேயே முதன் முதலாக தமிழ் வழியிலும்  ஐஏஎஸ் பயிற்சியை நடத்தி வருவது பெருமைமிக்க ஒன்று என்றும் கூறி மகிழ்ச்சி அடைந்தார். இந்த பேட்டியை யூடியூப் இணையத்தில் பார்க்கலாம். தொடர்ந்து இவரது பேட்டி கலைஞர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் 7 தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி மாணவர்களின் பாராட்டைப் பெற்றது. அதையும் யூடியூபில் பார்க்கலாம்.