முகப்பு / இந்திய விமான ஆணையப் பணி

இந்திய விமான ஆணையப் பணி

த்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான ஆணையம் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 170 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.

தேவையான தகுதி

இந்தப் பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், பாலிடெக்னிக் டிப்ளோமா (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபயர் சர்வீஸ் இன்ஜினியரிங்) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் லகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும் கணவரை இழந்தவர்களுக்கு 5 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தற்போது ஓ.பி.சி. வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.