முகப்பு / இலவச தொழில்நுட்பப் பயிற்சிகள்

இலவச தொழில்நுட்பப் பயிற்சிகள்

பி.எஸ்.என்.எல்., மற்றும் டி.என்.எஸ்.டி.சி., இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்காக, தொழில்நுட்ப பயிற்சிகளை இலவசமாக வழங்குகின்றன.

பயிற்சிகள்:
நெட் ஒர்க் மேனேஜ்மென்ட் இன்ஜினியர் மற்றும் டெலிகாம் டவர்  டெக்னிசியன் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 28ம் தேதியும், பிராட்பேண்ட் டெக்னிசியன் மற்றும் இன்ப்ரா  ஸ்ட்ரக்சர் இன்ஜினியர் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 3ம் தேதியும் துவங்குகின்றன.

கல்வித் தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / பட்டப்படிப்பு

வயது: 18 முதல் 40 வரை

பயிற்சி காலம்: 38  பயிற்சி நாட்கள்

விண்ணப்பிக்கும் முறை:  rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணைய தளத்தில் பதிவு செய்த எண், ஒரிஜினல் கல்வி சான்றிதழ், ஒரிஜினல் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் அந்தந்த பயிற்சி தொடங்கும் தினத்தில் காலை 10 – மாலை 4 மணி வரை நேரில் அணுக வேண்டும்.

இடம்: ராஜிவ் காந்தி மெமோரியல் டெலிகாம் ட்ரைனிங் சென்டெர், பி.எஸ்.என்.எல்., ஜி.எஸ்.டி., சாலை, மீனம்பாக்கம், சென்னை- 600016

குறிப்பு: தங்குமிடம் மற்றும் உணவு வசதியும் நிபந்தனைக்குட்பட்டு வழங்கப்படும். பயிற்சி நாட்களுக்கு தினமும் 100 ரூபாய் போக்குவரத்துப்படியும் வழங்கப்படும்.

தொடர்புக்கு:  044  22321021 (வேலை  நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை)

நன்றி : கல்விமலர்