முகப்பு / உங்கள் கேள்வி பதில்கள்

உங்கள் கேள்வி பதில்கள்

 

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடர்பாக அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளும்
அதற்க்கான பதில்களும்

 

 

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

.எண்.கேள்விதகவல்
1தேர்வாணையத்தின் தேர்வுகளில் கலந்து கொள்ள எவ்வாறு விண்ணப்பிப்பது?இணைய வழி முலமாக மட்டும்.
2இணைய வழி விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமா?தேவையில்லை.
3நான் இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது சான்றிதழ்களை அனுப்பிவைக்க வேண்டுமா?தேவையில்லை.
4நான் தேர்விற்கான கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது?1. இணைய வழி (நிகழ் நிலை)  மூலமாக:
வலை வங்கி முறை (Net Banking)
கடன் அட்டை (Credit Card)
பற்று அட்டை (Debit Card)
2. இணைய வழி இல்லாமல் :
தேர்வாணைய அறிவிக்கையில் குறிப்பிடப்படும் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும்  வங்கிக் கிளைகள் மூலமாக
தகுதியுடைமை 
1.நான் நடுவண் - மாநில அரசுப் பணியில் பணி புரிந்து வருகிறேன்,  நான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க இயலுமா?ஆம்.

1.  நடுவண் அரசு , மாநில அரசுப் பணியில் முதலில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடாது, (பிற வகுப்பினர்).

2.  ப.வ. /ப.வ. (அ) / ப.ப./ மி.ப.வ./ சீ.ம. / பி. வ. / பி. வ. (இ) ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தடையேதும் இல்லை.
2.நான் விண்ணப்பத்தை அனுப்பிய பின்னர் எனது இனம் / உயர்ந்த அல்லது கூடுதல் கல்வித் தகுதிகள் குறித்த கோரிக்கைகளை எழுப்ப இயலுமா?இயலாது.
3.பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இனங்கள் யாவை?1.        அருந்ததியர்

2.         சக்கிலியன்

3.        மாதாரி

4.        மாதிகா

5.         பகடை

6.        தோட்டி

7.        ஆதி ஆந்திரா
4.நான் இடஒதுக்கீட்டு வகுப்பைச் சார்ந்த.  ஆனால் பிற மாநிலத்தைச் சார்ந்தவன்,  நான் இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க இயலுமா?இயலாது.
5.நான் பட்டியல் வகுப்பினர் வகுப்பைச் சார்ந்தவன்.  ஆனால், நான் இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியுள்ளேன்.   நான் பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க இயலுமா?இயலாது.
இட ஒதுக்கீடு
1.         இன ரீதியான இடஒதுக்கீடு யார் யாருக்கு வழங்கப்படுகிறது?1.        பழங்குடியினர்

2.        பட்டியல் வகுப்பினர்

3.        பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்)

4.        மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - சீர் மரபினர்

5.        இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

6.        பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்)
2.         பெண்களுக்கு எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?30 விழுக்காடு
3.         நான் ஒரு ஆண் விண்ணப்பதாரர்.  நான் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களில் தெரிவு பெற வாய்ப்பு உள்ளதா?தெரிவு செய்யப்படத் தகுதியும். பதவிக்கு பொருத்தமும் வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள்  கிடைக்கப் பெறாவிடில். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அக்காலியிடங்கள் அவற்றிற்குரிய வகுப்புப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். இவ்விதிமுறை முழுவதுமாகப் பெண்களுக்காக அல்லது ஆண்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் தெரிவுகளுக்குப் பொருந்தாது.
4.         நான் ஒரு பெண் (ஆதரவற்ற விதவை அல்லாத) விண்ணப்பதாரர்.  நான் ஆதரவற்ற விதவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலியிடத்தில் தெரிவு பெற இயலுமா?தெரிவு செய்யப்படத் தகுதியும். பதவிக்கு பொருத்தமும் வாய்ந்த ஆதரவற்ற விதவையர்  கிடைக்கப் பெறhவிடில், ஆதரவற்ற விதவையருக்கான காலியிடம்  அதே வகுப்புப் பிரிவைச் சார்ந்த பிற பெண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
5.         நான் ஒரு ஆண் விண்ணப்பதாரர்.  நான்  ஆதரவற்ற விதவைப்  பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடத்தில் தெரிவு பெற இயலுமா?தெரிவு செய்யப்படத் தகுதியும். பதவிக்கு பொருத்தமும் வாய்ந்த ஆதரவற்ற விதவையர்/  பெண் விண்ணப்பதாரர் (ஆதரவற்ற விதவை அல்லாதவர்)    கிடைக்கப் பெறாவிடில்,  அக்காலியிடம்,  அதே வகுப்புப் பிரிவைச் சார்ந்த ஆண் விண்ணப்பதாரரால் நிரப்பப்படும். எனினும், இந்த உள்ஒதுக்கீட்டு விதி. ஆரம்ப அடிப்படைச் சம்பளம் ரூ4000/- (திருத்திய சம்பளம் ரூ 5200-20200+ தர ஊதியம் ரூ 2400)  ஐ மிஞ்சும் வகையில் அமைந்த சம்பள ஏற்ற முறைகளைக் கொண்ட பதவிகளுக்குப் பொருந்தாது.
6.         நான் ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பைச் சார்ந்தவன்.  நான் பிற ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுடன் ஆதி திராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்கு போட்டியிடலாமா? ஆம்.
ஆதிதிராவிடர் அருந்ததியருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டதும். பிற தகுதியுள்ள  ஆதிதிராவிடர் அருந்ததியினர் இன விண்ணப்பதாரர்கள் பிற ஆதிதிராவிடர் விண்ணப்பதாரர்களுடன் (inter-se-merit) முறையில் போட்டியிடலாம்.
7.         நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவன்,  நான் பிற ஆதிதிராவிடர் (அருந்ததியர்)  விண்ணப்பதாரர்களுடன் ஆதி திராவிடர் (அருந்ததியர்)  பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்திற்கு போட்டியிடலாமா?ஆதிதிராவிடர் அருந்ததியருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு  தகுதி பெற்ற ஆதிதிராவிடர் அருந்ததியினர் இன விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில். அப்பணியிடங்கள் ஆதிதிராவிடர் இன விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
ஆதரவற்ற விதவை
1.         ஆதரவற்ற விதவை எனும் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையோர் யாவர்?கீழ்காணும் அனைத்து வழியில்  இருந்தும் மொத்த மாத வருமானமாக ரூபாய். 4.000/- ஐ மிகாத தொகையைப் பெறுகின்ற ஒரு விதவையைக் குறிக்கும்.

1.        குடும்ப ஓய்வூதியம்.

2.        தொழிற்கல்வி பெற்றவர்களின் சுய தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3.        மற்ற வருமானங்கள்.
2.         நான் ஒரு ஆதரவற்ற விதவை. நான், ஆதரவற்ற விதவைச் சான்றிதழை யாரிடமிருந்து பெற வேண்டும்?1.        வருவாய் கோட்ட அலுவலர்.

2.        மாவட்ட உதவி ஆட்சியர்.

3.        மாவட்ட சார் ஆட்சியர்.
3.         நான் ஒரு மணமுறிவு பெற்ற நபர்.  நான், ஆதரவற்ற விதவை பிரிவின் கீழ் விண்ணப்பிக்க இயலுமா?இயலாது.
4.நான் ஒரு ஆதரவற்ற விதவை,  இப்பிரிவின் கீழ் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு காலி இடங்களில் 10 விழுக்காடு காலி இடங்கள் ஆதரவற்ற விதவை பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
5.         நான் ஒரு ஆதரவற்ற விதவை. இப்பிரிவின் கீழ் எல்லா விதமான பதவிகளுக்கும் விண்ணப்பிக்க இயலுமா?முடியாது.
குறைந்த பட்சம் ரூ. 5200-20200 + தர ஊதியம் 2400 ஐ மிகாத பதவிக்குரிய பணியிடங்களுக்கு மட்டும் இப்பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத்தினர்
1.         நான் ஒரு முன்னாள் இராணுவத்தினர். இப்பிரிவின் கீழ் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?சி  பிரிவின் கீழ் வரும் பதவிகளின் மொத்த காலியிடங்களில் 5 விழுக்காடு இப்பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2.         சி  பிரிவின் கீழ் வரும் பதவிகள் யாவை?தொடக்கச் சம்பளம் ரூ. 4800-10000 + தர ஊதியம் 1400-க்கு அதிகமாக,   ஆனால் ரூ.9300-34800+ தர ஊதியம் 4400-க்குக்
குறைவாக சம்பள விகிதம் கொண்ட பதவிகள்.
3.         நான் முன்னாள் இராஹணுவத்தினர், இப்பிரிவிற்கான உயர்ந்த பட்ச வயது வரம்பு என்ன?தெரிவு நடத்தப் பெறும் ஆண்டின் ஜுலை முதல் நாளன்று 53 வயதிற்கு குறைந்த ஆதிதிராவிடர் வகுப்பினர். ஆதிதிராவிடர் வகுப்பினர் (அருந்ததியர்). மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர். இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்)
ஏனையோர் 48 வயதிற்கு குறைந்தவர்கள்.
4.         நான் முன்னாள் இராணுவத்தினர். தேர்வாணைய அறிவிக்கை / விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு உட்பட அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் யாவும் முழுமையாகப் பெற்றிராவிட்டாலும் நான் விண்ணப்பிக்க இயலுமா?இயலும்.
இந்நேர்வில் விண்ணப்பங்கள் உங்களுடைய தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும், மேலும். வயது வரம்பு உட்பட தகுதிகள் எவையேனும் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்களானால் பரிசீலிக்கப்படும்.
5.         நான் தற்போது பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வருகிறேன், நான் முன்னாள் படைவீரர்களுக்கான சலுகையைப் பெற இயலுமா?முப்படை பணிவிடுவிப்பு பெறும் இறுதியாண்டில். அதாவது பணி விடுவிப்பு பெறுவதற்கு ஓராண்டு முன்னதாகவே. குடிமைப்பணித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு எழுத அனுமதித்து . தேர்வில் தேர்ச்சி பெறும் நிலையில் ஏனைய தகுதிகள் இருப்பின். நடுவண் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி முன்னாள் படைவீரர்களுக்கான சலுகைகளைப் பெறலாம்.
6.         யார் முன்னாள் படைவீரராகக் கருதப்படமாட்டார்?1.         படைப்பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டு முழு நேரப் பணி ஏற்காதவர் ( A Recruit)

2.        இராணுவ விதி 13 (3) III  (V) - இன் கீழ் பணி தேவைப்படாத காரணத்தினால் 1987-ஆம் ஆண்டு ஜுலைத் திங்களுக்கு முன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஆகியோர் முன்னாள் படைவீரராகப் கருதப்படமாட்டார்கள்
7.         முன்னாள் படைவீரர் பிரிவின் கீழ் சலுகை பெற என்ன ஆதாரத்தை வழங்க வேண்டும்?கோரிக்கைக்கு ஆதாரமாக உங்களது பணிவிடுவிப்புச் சான்றிதழிலிருந்து (Discharge Certificate) தகுந்த முறையில் எடுக்கப்பட்டு உறுதியொப்பமிட்ட எடுகுறிப்பைப் பின்வரும் படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

1.        பணி வேட்பாளாரின் பெயர்

2.        வகித்த பதவி

3.        படையில் சேர்ந்த தேதி

4.        விடுவிக்கப்பட்ட தேதி

5.         விடுவிக்கப்பட்டதற்கான காரணங்கள்

6.        இராணுவத்தில் வேலை பார்த்தபோது நடத்தையும். ஒழுக்கமும்
மாற்றுத்திறனாளிகள்
1.         நான் ஒரு மாற்றுத்திறனாளி, எனக்கு வயது வரம்பில் சலுகை உண்டா?உண்டு.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது சலுகை பெறத் தகுதியுண்டு. ஆனால். நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட பதவிக்கு மற்றபடி தகுதியானவராக இருப்பதுடன். அப்பதவியில் திறம்படப் பணியாற்றுவதற்கு உங்களின் உடல் ஊனம் எவ்வகையிலும் தடையாக இருக்காது என மருத்துவ அலுவலரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
2.         மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் சலுகை பெற உடல் ஊனத்தின் அளவு எத்தனை விழுக்காடு இருக்க வேண்டும்?மாற்றுத் திறனாளிகளுக்கு உரியனவாகத் தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டாலொழிய, அவையும் தேர்வாணையத்தின் அறிவிக்கையில் /விளம்பரத்தில் அறிவிக்கப்படும் ஏதேனும் பிற சலுகைகளும் அவர்களது உடல் ஊனத்தின் அளவு 40 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும்.
3.         நான் ஒரு மாற்றுத்திறனாளி,  நான் யாரிடமிருந்து மாற்றுத்திறனாளிச் சான்றிதழைப் பெறவேண்டும்?சம்மந்தப்பட்ட துறையில் பணியாற்றும் ஒரு மருத்துவ அலுவலரிடமிருந்து பெற்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
4.         நான் ஒரு மாற்றுத் திறனாளி, தேர்வெழுத உதவியாளர்களை (Scribe) நான் தான் நியமிக்க வேண்டுமா?தேவையில்லை,
தேர்வாணையமே நியமிக்கும்.
5.         நான் ஒரு மாற்றுத் திறனாளி, தேர்வெழுத நியமிக்கப்பட்டுள்ள உதவியாளருக்கான  (Scribe)ஊதியத்தை நான் தான் வழங்க வேண்டுமா?தேவையில்லை,
தேர்வாணையமே வழங்கும்.
6.         நான் ஒரு மாற்றுத் திறனாளி. எனது எந்தக் கையினாலும் எழுத இயலாது.  எனக்கு தேர்வெழுத கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்படுமா?30 நிமிடங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
7.         நான் மாடி ஏற இயலாத மாற்றுத் திறனாளி. நான் பிற விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து கீழ்த்தளத்திலேயே தேர்வெழுத அனுமதி கிடைக்குமா?அனுமதி உண்டு.
8.         மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு வகையினருக்கும் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?ஓவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிற்கும் ஒதுக்கப்படும் மொத்த காலியிடங்களில், கண்பார்வையற்றோர். காது கேளாதோர்,உடல் உறுப்பு ஊனமுற்றோர் ஆகிய ஒவ்வொரு வகையினருக்கென்று தனித்தனியே ஒவ்வொரு விழுக்காடு காலியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
9.         அனைத்துப் பதவிகளுக்கும் மாற்றுத் திறனாளி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு உண்டா?மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான பணியிட ஒதுக்கீடு அனைத்துச் செயல் சாரா பதவிகளுக்கும் பொருந்தும். செயல் சார் பதவிகளைப் பொறுத்த வரையில், மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணியிட ஒதுக்கீடு. அ மற்றும் ஆ தொகுதிகளின் கீழ் மாநில அரசால் ஒப்பளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பதவிகளுக்கும், இ மற்றும் ஈ தொகுதிகளின் கீழ் வரும் அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தும்.  இவை தேர்வாணைய அறிவிக்கையில் / விளம்பரத்தில் அவ்வப்போது குறித்துக் காட்டப்படும்.
கல்வித்தகுதி
1.         குறைந்த பட்ச கல்வித் தகுதி என்பது என்ன?1.        இம்மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் கல்லூரிப் படிப்புகளுக்கு அனுமதிக்கத் தகுதி பெறும் வகையில் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அல்லது

 

1.        இம்மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி.
2.         நான் நியமனத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியைப் பெறவில்லை,  ஆனாலும் அவற்றிற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றுள்ளேன் நான் மேற்படி நியமனத்திற்கு விண்ணப்பிக்க இயலுமா?ஆம்,
அத்தகைய நிகழ்வுகளில் இணையான கல்வித் தகுதிதான் என்பதற்கான சான்றுக் கடிதத்தினை நீங்கள் பயின்ற பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.  இருந்த போதிலும். இக்கல்வித் தகுதி அரசாணை எண்.441 நிர்வாக மற்றும் சீர்திருத்த (ஆர்) துறை. நாள் 2.012.1993-இன் படி அமைக்கப்பட்ட இணைக் கல்வித் தகுதி நிர்ணய பரிசீலிப்புக் குழுவினால் எடுக்கப்படும் முடிவிற்கும். அரசு எடுக்கும் முடிவிற்கும் கட்டுப்பட்டதாகும்.
3.         நான் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்கவில்லை? நான் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாமா?ஆம்.
போதுமான தமிழ் அறிவு இல்லாதோரும் விண்ணப்பிக்கலாம்,  அவர்கள் தேர்வு பெற்றுப் பணியில் நியமிக்கப்பட்டால். பணியில் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப் பெறும் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் (முழுத்தேர்வு)  தேர்ச்சி பெற வேண்டும்.  அவ்வாறு தேர்ச்சி பெறத் தவறுபவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
4.         போதுமான தமிழ் அறிவு என்பதன் பொருள் என்ன?கீழ்காகாணும் தகுதியைப் பெற்றிருந்தால் ஒருவர் போதிய தமிழறிவு பெற்றவராக கருதப்படுவார்.

ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி குறைந்த அளவு பொதுக் கல்வித் தகுதியும், அதற்கு மேலும் இருந்தால் பள்ளியிறுதிப் பொதுத் தேர்வில் தமிழை ஒரு மொழியாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு பள்ளியிறுதிப் பொதுத்  தேர்வைத் தமிழில் எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பெறும் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் (முழுத்தேர்வு) தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டண விலக்களிப்பு
1.         யார் யாருக்கு தேர்வுக் கட்டணம் சலுகை வழங்கப்படுகிறது?1. முழுக் கட்டண விலக்கிற்கு   (எண்ணிக்கை    உச்ச வரம்பின்றி) தகுதியுடையோர்:

அ. ஆதி திராவிடர்
ஆ. ஆதி திராவிடர் (அருந்ததியர்)
இ. பழங்குடியினர்
ஈ. மாற்றுத் திறனாளிகள்
உ. ஆதரவற்ற விதவைகள்
2.         நான்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்தவன்.  எனக்கு தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?ஆம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால்
மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
3.         நான் இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  வகுப்பைச் சார்ந்தவன்,  எனக்கு தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?ஆம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால்
மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
4.         நான்; பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்)  வகுப்பைச் சார்ந்தவன்,  எனக்கு தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?ஆம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால்
மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
5.         நான் முன்னாள் இராணுவத்தினர். எனக்கு தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?ஆம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால்
இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. (பட்டதாரியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை).
6.         நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்தியுள்ளேன்.  ஆனால் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவில்லை,  இந்நேர்வில் நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்த வில்லை எனக் கொள்ளலாமா?இயலாது.
விண்ணப்பம் அனுப்பிய பிறகு நேர்முகத் தேர்வு உட்பட போட்டித் தேர்வுக்கு வரத் தவறினாலும் அளிக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதப்படும்.
7.         நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்தியுள்ளேன். ஆனால், நேர்காணல் தேர்வில் பங்கேற்கவில்லை,  இந்நேர்வில் நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்த வில்லை எனக் கொள்ளலாமா?இயலாது.

விண்ணப்பம் அனுப்பிய பிறகு நேர்முகத் தேர்வு உட்டபட போட்டித் தேர்வுக்கு வரத் தவறினாலும் அளிக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டதாகவே கருதப்படும்.
8.         கட்டணச் சலுகை குறிப்பிட்ட பதவியைப் பொருத்ததா அல்லது விண்ணப்பத்தைப் பொருத்ததா?அளிக்கப்பட்டுள்ள மூன்று / இரண்டு முறை கட்டணச் சலுகை ஒவ்வொரு பதவிக்கும் இல்லை. மொத்தமாக ஏதாவது மூன்று / இரண்டு விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
9.         எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது (Rejected). இந்நேர்வில் நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்தியதாகக் கருதப்படுமா?ஆம்.
10.       நான் எனது விண்ணப்பத்தினை திரும்பப் பெற்றுக் கொண்டேன். (WITHDRAWN) இந்நேர்வில் நான் கட்டணச் சலுகையினை பயன்படுத்தியதாகக் கருதப்படுமா?ஆம்.
11.       நான் ஏற்கனவே பெற்ற கட்டணச் சலுகையை மறைத்து பொய்யாகக் கட்டணச் சலுகைக் கோரினால் (False claim) . அதன் விளைவு என்ன?உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன். நீங்கள் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்வதிலிருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள்.
12.       நான்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்/  இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) வகுப்பைச் சார்ந்தவன். மேலும் நான் புதுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன்/ எனக்குத்  தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?கிடையாது.
13.       நான்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்/ இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) வகுப்பைச் சார்ந்தவன். மேலும், நான் பட்டப்படிப்பில் முதல் அல்லது  இரண்டாம் ஆண்டு முடிவில் நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அல்லது பட்டப் படிப்புத் தேர்வில் சில பாகங்களில் மட்டுமே தேர்வு பெற்றிருந்தாலும் எனக்கு தேர்வுக் கட்டணச் சலுகை உண்டா?கிடையாது.
  வயது - சலுகை
1.         விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (அறிவிக்கையில் வேறு வகையாக குறிப்பிடப்படாத பட்சத்தில்)
2.         விண்ணப்பிக்க அதிக பட்ச வயது வரம்பு என்ன?நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்தது.
3.         எந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது கணக்கிடப்படுகிறது?அறிவிக்கை வெளியான ஆண்டின் ஜூலை முதல் நாள்.
சான்றிதழ்கள்
1.         நான் பட்டியல் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவன்.  நான் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

1.        வருவாய் கோட்ட அலுவலர்


2.        மாவட்ட உதவி ஆட்சியர்


3.         மாவட்ட சார் ஆட்சியர்


4.        சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)


5.        மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்

2.         நான் பட்டியல் வகுப்பினர்/ பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்) வகுப்பைச் சார்ந்தவன்.  நான் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?வட்டாட்சியர்
3.         நான்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்/ இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) வகுப்பைச் சார்ந்தவன்.  நான் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

1.        வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலர்


2.         தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்


3.        சாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியர்


4.        கூடுதல் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்


5.         மண்டல துணை வட்டாட்சியர்

4.         நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் (ராஜ கம்பளம்), கொல்லவர், சில்லவர், தொக்களவர், தொழுவ நாயக்கர் மற்றும் எர்ரகொல்லார் உட்பட) வகுப்பைச் சார்ந்தவன்.  நான் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்
5.         பிறந்த தேதிக்கானச் சான்றாக எந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

1. உயர்நிலைப் பள்ளியைவிட்டுச் சென்றதற்கான சான்றிதழ் (SSLC)   அல்லது


2. பல்கலைக்கழகத்தின் அல்லது கல்லூரியின் அல்லது பள்ளியின் ஆவணங்களில் கண்டுள்ளவற்றிற்கு இணங்க பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் அல்லது பள்ளி அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பிறந்த தேதியைக் காட்டுகின்ற ஒரு சான்றிதழ் (ஞானஸ்தான அல்லது பிறப்புப் பதிவேட்டின் எடுகுறிப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது) அல்லது


1. மாநில அரசின் கீழ் முறையான பணியில் உள்ள விண்ணப்பதாரர்களின் பணிப்பதிவேட்டிலிருந்து அவர்களுடைய பிறந்த தேதிக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட எடுகுறிப்பு.

6.         நான் கடைசியாகப் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற தனிப்பயிற்சிக் (Tutorial)  கல்லூரி அல்லது பள்ளியிலிருந்து கடைசியாகப் பயின்றதற்கான நன்னடத்தைச் சான்றிதழை பெறலாமா?கூடாது.
7.         நான் கடைசியாகப் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற தட்டச்சுப் பயிற்சி நி[லையத்திலிருந்து  கடைசியாகப் பயின்றதற்கான நன்னடத்தைச் சான்றிதழைப்  பெறலாமா?கூடாது.
8.         நான் கடைசியாகப் படித்த அல்லது படித்துக் கொண்டிருக்கிற சுருக்கெழுத்து பயிற்சி நிலையத்திலிருந்து  கடைசியாகப் பயின்றதற்கான நன்னடத்தைச் சான்றிதழைப்  பெறலாமா?கூடாது.
9.         நான் யாரிடமிருந்து ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக்கான சான்றிதழைப் பெற வேண்டும்?உங்களை நேர்முகமாகத் தெரிந்துள்ள ஒரு அ அல்லது ஆ நிலை அரசு அலுவலரிடமிருந்து பெற வேண்டும்.
10.       எந்தத் தேதிக்குப் பிறகு நான் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக்கான சான்றிதழைப் பெற வேண்டும்?செய்தித்தாள்களில்  நியமனத்திற்கான விளம்பரம் செய்யப்பட்ட மாதத்தின் முதல் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற வேண்டும்.
11.       எனது உறவினரிடமிருந்து ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக்கான சான்றிதழைப் பெறலாமா?கூடாது.
12.       நான் கடைசியாகப் படித்த கல்வி நிலையத்தில் படித்த கால அளவு ஒரு கல்வி ஆண்டிற்குக் குறைவாக இருக்கிறது. அக்கல்வி நிலையத்திலிருந்து  கடைசியாகப் பயின்றதற்கான நன்னடத்தைச் சான்றிதழை பெறலாமா?இந்நேர்வில் நீங்கள் ஒரு கல்வி ஆண்டிற்குக் குறையாமல், கடைசியாகப் படித்த கல்வி நிலையத் தலைவரிடமிருந்து மற்றொருச் சான்றிதழையும் பெற்று அனுப்ப வேண்டும்.
13.       கடைசியாகப் பயின்றதற்கான நன்னடத்தைச் சான்றிதழையும், அ அல்லது ஆ நிலை அரசு அலுவலரிடமிருந்து பெற வேண்டிய ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக்கான சான்றிதழையும் ஒரே நபரிடமிருந்துப் பெறலாமா?கூடாது.
14.       மதிப்பெண் பட்டியல் அல்லது மதிப்பெண் நிலைச் (Grade Certificate)ஆகியவற்றின் நகல்கள் கல்வித் தகுதிக்கான போதுமான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுமா?ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பட்டம் அல்லது பட்டத்தின் தற்காலிகச் சான்றிதழின் நகல்கள் மட்டுமே கல்வித் தகுதிக்குரிய சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்.
15.       நான், நடுவண் /மாநில அரசு /- உள்ளாட்சி மன்றம் /பல்கலைக் கழகம் / அரசின் சார்புள்ள நிறுவனத்தில்  பணியில் உள்ளேன்.  நான் எனது விண்ணப்பத்தை துறைத்தலைவர் வாயிலாகத்தான் அனுப்ப வேண்டுமா?தேவையில்லை.

இந்நேர்வில், நீங்கள் தேர்வாணையத்தின் எந்த தெரிவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை எழுத்து மூலம் உங்கள் துறைத்தலைவருக்கு தெரிவித்து விட்டு  நேடையாக தேர்வாணையத்திற்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
16.       நான், நடுவண் /மாநில அரசு /  உள்ளாட்சி மன்றம் / பல்கலைக் கழகம் / அரசின் சார்புள்ள நிறுவனத்தில்  தற்காலிகப்பணியில் உள்ளேன். நான். விண்ணப்பத்தை ஏற்கத் தடையில்லை எனும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமா?ஆம்.
17.       நான் தேர்வாணையத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு நடுவண் / மாநில அரசு /உள்ளாட்சி மன்றம் /பல்கலைக் கழகம் / அரசின் சார்புள்ள நிறுவனத்தில்  பணியில் சேர்ந்துள்ளேன்.  நான், விண்ணப்பத்தை ஏற்கத் தடையில்லை எனும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமா?ஆம்.
18.       நான் தடையின்மைச் சான்றிதழை அனுப்பிய பிறகும். பணியமர்த்தப்பட்ட நாளிற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் என் மீது குற்றவியல் / ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலோ, தண்டனை ஏதும் பெற்றிருந்தாலோ அவ்விவரத்தை தேர்வாணையத்திற்கு தெரிவிக்க வேண்டுமா?ஆம்.

இத்தகைய விவரங்களை உங்களது பதிவெண்ணுடன் உடனடியாக தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
19.       இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிழற்படத்தை (Photograph) விண்ணப்பிக்க பயன்படுத்தலாமா?கூடாது.
நிழற்படங்கள் விண்ணப்ப தேதிக்கு முன் ஒரு மாதத்திற்குள்ளாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பட்டறிவு (அனுபவம்)
1.           நான் ஒரு பதவிக்கென அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி / தொழில் நுட்பத் தகுதியை பெறுவதற்கு முன்பே நடைமுறை அனுபவம் / மற்ற அனுபவம் பெற்றிருந்தால் அவ்வனுபவம் ஏற்றுக் கொள்ளப்படுமா?தனியாகக் கூறப்பட்ட இனங்களைத் தவிர, அறிவிக்கப்பட்ட பதவிக்கான கல்வித் தகுதி / தொழில் நுட்பத் தகுதியுடன் நடைமுறை அனுபவம் / மற்ற அனுபவங்கள் ஏதாவது தேவையென அறிவிக்கப்பட்டிருந்தால் அப்பதவிக்கான கல்வித் தகுதி  தொழில் நுட்பத்தகுதிகளை பெற்ற பிறகே அவ்வனுபவங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வுகள்
1.         தொகுதி- 1 இல் அடங்கியுள்ள பதவிகளுக்கான பல்வேறு தெரிவு நிலைகள் யாவை?1. முதனிலைத் தேர்வு (முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கத் தகுதியான விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்வதற்கான தேர்வு)

2. முதன்மை எழுத்துத் தேர்வு

3.நேர்காணல் தேர்வு வடிவில் அமைந்த வாய்மொழித் தேர்வு
2.         முதனிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இறுதித் தகுதியை முடிவு செய்வதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
3.         முதன்மை எழுத்துத் தேர்விற்கு எந்த விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுகிறன்றனர்?முதன்மை எழுத்துத்தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை. அப்பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ள மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் போன்று இருபது மடங்கு இருக்கும்.
4.         முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்படுவதற்குரிய இறுதி விண்ணப்பதாரர் பெற்ற அதே மதிப்பெண்களைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 1:20 எனும் விழுக்காட்டைவிட அதிகமாக இருப்பின் அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்களா?ஆம்.
5.         முதன்மை எழுத்துத் தேர்வு / எழுத்துத் தேர்வின்  அனைத்துப் பாடங்களிலும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமா?ஆம்.
எழுத்துத் தேர்வின் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்வெழுதாத (எழுதத்தவறியிருந்தாலும்) விண்ணப்பதாரர் அத்தெரிவுக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கூட தெரிவு செய்யப்பட தகுதியானவராகக் கருதப்பட மாட்டார்.
நேர்காணல் தேர்வு
1.         எத்தனை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்?பணியிட ஒதுக்கீட்டிற்குரிய வகுப்புப்  பிரிவுகளுள்.

எந்தெந்தப் பிரிவுகளில் ஒதுக்கீடு

செய்யப்பட்ட / அறிவிக்கப்பட்ட  காலியிடங்களில்

எண்ணிக்கை ஐந்தாகஅல்லது அதற்குமேற்பட்டு

இருக்கிறதோ,

அந்தந்தப் பிரிவுகளில் வாய்மொழித்தேர்விற்கு

அனுமதிக்கப்படும்

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, அக்குறிப்பிட்ட

பிரிவுகளுள் நியமனம்

செய்யப்படவுள்ள விண்ணப்பதாரர்களின்

எண்ணிக்கையைப் போன்று
இரு மடங்காக இருக்கும்.

அதே நியமனத்திற்குரிய

காலியிடங்கள்
எந்தெந்த வகுப்புப் பிரிவுகளுள் 

நான்காக
 அல்லது
அதற்கும்
 குறைவாகஉள்ளதோ.

அந்தக் குறிப்பிட்ட

பிரிவுகளுள்
வாய்மொழித்தேர்விற்கு அனுமதிக்கப்படும்

விண்ணப்பதாரர்களின்
எண்ணிக்கை.

அக்குறிப்பிட்ட பிரிவுகளுள் நியமனம்
செய்யப்படவுள்ள
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப்

போன்று  மூன்று மடங்காக இருக்கும்.
2.         எழுத்துத் தேர்வு மற்றும் நேர் காணல் தேர்வு இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டுமா?ஆம்.
3.         தேர்வுகளில் நான் பெற்ற மதிப்பெண்களை எவ்வாறு தெரிந்து கொள்வது?நேர்காணல் தேர்வில் பங்கு பெற்ற விண்ணப்பதாரர்கள்.

எழுத்துத் தேர்விலும். நேர்காணல் தேர்விலும் பெற்ற

மதிப்பெண்கள்.

அக்குறிப்பிட்ட பதவிக்கான நேர்காணல் தேர்வுகள்

நடைபெறும் நாட்களின் கடைசி நாளன்று மாலையோ.

அதற்கு அடுத்த வேலை நாளன்றே தமிழ்நாடு

அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில்

உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும்,

இம்மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும் (www.tnpsc.gov.in)வெளியிடப்படும்.
தெரிவு
1.         தேர்வாணையத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட நபருக்கு அப்பதவியில் நியமிக்கப்படுவதற்கான உத்திரவாதம் உண்டா?இல்லை.
2.         நான் இடஒதுக்கீட்டு வகுப்பைச் சார்ந்தவன், நான் பொது முறைகளில் மு்லம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தெரிவு பெற இயலுமா?இயலும்.
3.         தெரிவுப் பட்டியல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு இடஒதுக்கீட்டு பிரிவின் கீழும் போதுமான அளவு விண்ணப்பதாரர்கள் தரவரிசைப் பட்டியலிலிருந்து (Ranking List)தெரிவு செய்யப்பட்டு,  அவ்விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் வேலை முறைப் பட்டியலில் (Roster)  உள்ள இன சுழற்சி முறை (Turn) க்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் வரிசைப்படுத்தப்பட்டு தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
4.         நான் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்தவன்.  நான் பொது முறைகளின் (General Turn) மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தெரிவு பெற இயலுமா?ஆம்.
இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களும் பொது முறைகளின் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்குத் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர்.
5.         இரண்டு (அல்லது) இரண்டிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும் நிகழ்வில் எவ்வாறு தெரிவு இறுதி செய்யப்படுகிறது?இரண்டு (அல்லது) இரண்டிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும் நிகழ்வில் வயதில் மூத்தவர்  முன்னிலை பெறுவார்.

வயதும் சமமாக இருப்பின், அவர்களில் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னிலை பெறுவார்.
எழுத்துத் தேர்விலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருப்பின், இணைய வழி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட  வரிசையின் அடிப்படையில் முன்னிலை பெறுவர்.
காப்புப் பட்டியல்
1.         காப்புப் பட்டியலில் எத்தனை விண்ணப்பதாரர்கள் இடம் பெறுவர்?ஓவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழும் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் 25 %,
ஒருங்கிணைந்த தெரிவைப்  (Combined Selection) பொருத்த வரை 50 %.
2.         காப்புப் பட்டியலின் ஆயுட் காலம் என்ன?இப்பதவிக்கான அடுத்த தெரிவுப் பட்டியல் இறுதி செய்யப்படும் காலம் வரை.
3.         எந்தெந்த சூழ்நிலைகளில் காப்புப் பட்டியலிலிருந்து விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்?

1.        தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணியில் சேராதிருத்தல்.

2.        தெரிவு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பின்னர் பணியிலிருந்து விலகுதல்.


3.        ஏதேனும் ஒரு காரணத்திற்காக விண்ணப்பதாரர்களின் தற்காலிகத் தெரிவு இரத்து செய்யப்படுதல்.

பொது
1.         தேர்வுகளில் நான் பெற்ற மதிப்பெண்களை எவ்வாறு தெரிந்து கொள்வது?நேர்காணல் தேர்வில் பங்கு பெற்ற விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்விலும், நேர்காணல் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள், அக்குறிப்பிட்ட பதவிக்கான நேர்காணல் தேர்வுகள் நடைபெறும் நாட்களின் கடைசி நாளன்று மாலையோ. அதற்கு அடுத்த வேலை நாளன்றோ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். இம்மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும

(www.tnpsc.gov.in)வெளியிடப்படும்.
2.         நான் எவ்வாறு தேர்விற்கான பாடத்திட்டத்தை (Syllabi) பெற முடியும்?அனைத்துப் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 16.05.2001-ஆம் நாளிட்ட செய்தி அறிவிப்பு வெளியீடு (TNPSC Bulletin) எண்.11-இலும். அவ்வப்போது அடுத்து வரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்தி அறிவிப்பு வெளியீடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
அது எழுதுபொருள் அச்சுத்துறை அலுவலகம். சென்னை – 600 002-இல் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், தேர்வாணையத்தின் இணையதளத்திலும்(www.tnpsc.gov.in) கிடைக்கப் பெறும்.
3.         எந்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள  பொதுக் கல்வித் தகுதி இறுதித் தேர்வு  முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாக கணக்கில் கொள்ளப்படும்?இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாகக் கருதப்படும். ஏதேனும் தாள்களில் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் இருப்பின் நிலுவைத்தாள்கள் உட்பட அனைத்துத் தாள்களிலும் தேர்வெழுதி அவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதித் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
4.         தெரிவு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுவது ஏன்?விண்ணப்பதாரர்களிடமிருந்து சில சான்றிதழ்கள் பெறப்பட வேண்டியது / விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள சில தகவல்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய  வேண்டியது ஆகிய நிகழ்வுகளில் தெரிவு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
5.         நிறுத்தி வைக்கப்பட்டத் தெரிவு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும்?விண்ணப்பதாரர்களால்  சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் பிற அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆய்வு முடிவுகள் ஆகியவை  பெறப்பட்டு தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தேர்வு முடிவகள்  வெளியிடப்படும்.