முகப்பு / வங்கித் துறை

வங்கித் துறை

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவருகின்றன.

இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது.

தகுதி

வங்கி பணியில் சேரப் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட பாடப் பிரிவில்தான் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது.

கலை, அறிவியல், வணிகவியல் என எந்தப் பாடப் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். வயது வரம்பு 20-28 க்குள் இருக்க வேண்டியது மட்டும் கட்டாயம். அதே நேரத்தில் கணித ஆற்றல் மிக்கவர்களுக்கு இந்த வேலை ஏதுவாக இருக்கும்.

பகுப்பாய்வு, தர்க்கத் திறன், பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு, ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் ஆப்டிடியூட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

ப்ரோபேஷனரி ஆபிசர் பதவிக்கான தேர்வில் மட்டும் கட்டுரை வடிவில் ஆங்கிலத்தில் விரிவான விடையளிக்கும் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்காணலும் குழுகலந்துரையாடலும் நடத்தப்படும். அடுத்து, பண முதலீடு, சேமிப்பு, கடன், வட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக வங்கியை அணுகும் பலவிதமான மக்களை அன்றாடம் சந்திக்கும் வேலை இது. ஆகவே, வாடிக்கையாளர்கள் சேவையில் சிறப்பாக விளங்கும் அணுகுமுறை அவசியம்.

வேலைவாய்ப்பு வங்கித் துறையில் அதிகரித்திருந்தாலும் போட்டியும் நிறைத்தே உள்ளது என்பது நிதர்சனம். தனியார் வேலைகளில் ஏற்படும் அதிருப்தி பலரை அரசு வங்கிகளை நோக்கித் திருப்பியுள்ளது.

இதனால் சில ஆயிரம் பணியிடங்களுக்குப் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். இருந்தாலும் பலவிதமான வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஐ.பி.பி.எஸ் நான்கு தேர்வுகள், எஸ்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் ஆர்.பி.ஐ. இரண்டு தேர்வுகள் – இப்படிப் பல வங்கித்தேர்வுகள் நடப்படுகின்றன. குமாஸ்தா (Clerk) வேலைக்கு மாதச் சம்பளம் ரூ.18,000 என்பதில் தொடங்கி அதிகாரி வேலைகளுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. இதுதவிரப் பல சலுகைகளும் உண்டு.

எப்படித் தயாராவது?

வங்கித் துறையில் பணியாற்றுபவர்களோடு கலந்துரையாடுங்கள். வங்கி தேர்வுக்குத் தேவையான பொது அறிவு, மொழி அறிவு, தர்க்க அறிவு,கணித அறிவு எனப் பலவற்றைக் கூர்மைப்படுத்தச் ஆட்சித்தமிழ் அகாடெமி சிறந்த பயிற்சி அளிக்கிறது.

எங்கள் பயிற்சி மையத்தில் படித்தாலும் கற்றுக்கொண்டவற்றை மீண்டும் மீண்டும் சுயமாகப் பயிற்சி செய்வது இன்றியமையாதது. வெற்றி பெரும் ஆர்வத்தை தூண்டி ஆக்கமும் ஊக்கமும் வழங்கி ஆட்சித்தமிழ் அகாடெமி வழிகாட்டுகிறது.

நாங்கள் வெறுமனே தேர்வுக்கான பாடத்திட்டத்தை மட்டும் கற்பிப்பதில்லை. இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வங்கி வேலை தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட கையேடுகள் வழங்குகிறோம். எங்கள் நூலகத்தில் எந்நேரமும் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது,

பல பல மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன, கூடுதல் கவனம் செலுத்த பல தேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாகக் கல்லூரி மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வங்கி வேலையில் சேர விரும்புகிறார்கள்.

எட்டாம் வகுப்பின் அடிப்படை கணிதத்தைச் சிறப்பாகப் பயின்றாலே எளிதில் இந்தத் தேர்வில் வெற்றி பெறலாம். அதுவும் தமிழகத்தைப் பொருத்தவரை 100-க்கு 21 மதிப்பெண் எடுத்தாலே பாஸ். தொடர்ந்து தேர்வுகளை எழுதிப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறலாம்.

அடுத்த சில மாதங்களில் பல வங்கித் தேர்வுகள் நடைபெற உள்ளன. அத்தனைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். பல ஆயிரம் காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்போதிலிருந்து முறையாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தால் யாராக இருந்தாலும் குறித்த காலத்தில் வங்கி வேலையை வென்றெடுக்கலாம்!”

In today’s world, every graduate is seeking for a Bank job which consists of less working hours but good pay scale. So that’s why Banking Jobs are getting popular amongst graduates these days. As we all know, Banks are the backbone of the Indian economy they are planning to recruit some lakhs of candidates annually. So there is a huge job opportunity in Banking Sector, nowadays. But getting a job in the bank is not easy anymore. It seems tough and hard work. The candidate has first to pass his written examination, and after that, one should also clear the interview round. There is a lot of competition resides in any exam that applicant attends at any level, but good preparation tips will surely earn you that winning edge. Some of the common tips to get prepared for bank exams are starting exam preparations early, effective time management, and practicing mock tests. You can also get some more tips from this page.

Associated Exams

Students who have enrolled for this Banking Course can also clear following Exams.

Institute of Banking Personnel Selection (IBPS)

 • IBPS PO – Probationary Officer
 • IBPS Clerk – Clerical Officer
 • IBPS SO – Specialist Officer
 • IBPS Regional Rural Bank (IBPS RRB) Officer, Assistant

State Bank of India

 • SBI PO – Probationary Officer
 • SBI SO – Specialist Officer
 • SBI Clerk – Clerical Officer

Reserve Bank of India & NABARD Exams

 • RBI Grade B Officer
 • RBI Assistant
 • NABARD Assistant Manager
 • NABARD Assistant

Insurance Exams

 • LIC – Administrative Officer
 • LIC – Development Officer
 • NICL – National Insurance Corp Ltd
 • NIACL – New India Assurance Corp Ltd