முகப்பு / இதர தேர்வுகள்

இதர தேர்வுகள்

மத்திய அரசுத் துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலி: மக்களவையில் தகவல்

மத்திய அரசில் சுமார் 4,12,752 காலிப்பணியிடங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து இன்று நடந்த மக்களவை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் குறித்த ஆண்டறிக்கையின்படி மொத்த 36,33,935 பணியிடங்கள் உள்ளன. …

Read More »

இந்திய விமான ஆணையப் பணி

மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான ஆணையம் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 170 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. தேவையான தகுதி இந்தப் பணிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், பாலிடெக்னிக் டிப்ளோமா (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபயர் சர்வீஸ் இன்ஜினியரிங்) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் லகுரக வாகன ஓட்டுநர் உரிமம் …

Read More »

இலவச தொழில்நுட்பப் பயிற்சிகள்

பி.எஸ்.என்.எல்., மற்றும் டி.என்.எஸ்.டி.சி., இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்காக, தொழில்நுட்ப பயிற்சிகளை இலவசமாக வழங்குகின்றன. பயிற்சிகள்: நெட் ஒர்க் மேனேஜ்மென்ட் இன்ஜினியர் மற்றும் டெலிகாம் டவர்  டெக்னிசியன் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 28ம் தேதியும், பிராட்பேண்ட் டெக்னிசியன் மற்றும் இன்ப்ரா  ஸ்ட்ரக்சர் இன்ஜினியர் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 3ம் தேதியும் துவங்குகின்றன. கல்வித் தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / பட்டப்படிப்பு வயது: 18 முதல் 40 வரை …

Read More »

ஐ.ஏ.எஸ். என்றால் தெரியும் , அது என்ன ஐ.இ.எஸ்.

ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளைப் போலவே மத்திய அரசு பணியில் இந்தியப் பொறியியல் பணி (Indian Engineering Service-IES) எனப்படும் இன்னொரு அகில இந்தியப் பணியும் இருக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வை எந்தப் பட்டதாரியாக இருந்தாலும் எழுதலாம். எனவே, அதற்குப் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஐ.இ.எஸ். தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இத்தேர்வுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அளவுக்குக் கடுமையான …

Read More »

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சார்நிலைப் பணிகளில் (குரூப்-பி, குரூப்-சி) உள்ள காலியிடங்கள் பணியாளர் தேர் வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உண்டு. முதல் நிலையில் இதர அரசு போட்டித்தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொது அறிவு, ரீசனிங், …

Read More »

தபால் துறை

இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகிறது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய …

Read More »

வங்கித் துறை

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி. துறையைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து வருவது வங்கித் துறையாகும். ஏனென்றால், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள்வரை பல வங்கி கிளைகள் புதிதாகத் திறக்கப்பட்டுவருகின்றன. இதனால் இத்துறையில் வேலைவாய்ப்பும் வேகமாக அதிகரித்துவருகிறது. அதிலும் அரசு வங்கிகளில் வேலை என்பது மரியாதையும், நல்ல சம்பளமும், வேலை உத்தரவாதமும் நிறைந்தது. தகுதி வங்கி பணியில் சேரப் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட பாடப் பிரிவில்தான் பட்டதாரியாக இருக்க …

Read More »

இரயில்வே துறை

இரயில்வே துறை தேர்வுகள் உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெருமைக்குரியது. தினமும் பல கோடி பேர் ரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இத்துறையில் பணியாற்றுவது இப்போது எளிதே. ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களும் ரயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்திவந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத தமிழ் வழி …

Read More »

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ”ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு” களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி …

Read More »